12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள் - தமிழிசை சவுந்தரராஜன்

தோல்வி அடைந்த பல பேர் தான் இன்று வாழ்க்கையில் பல சாதனைகளை புரிந்து இருக்கிறார்கள்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள் - தமிழிசை சவுந்தரராஜன்
Published on

சென்னை,

தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது.. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.. அதே நேரத்தில் கடுமையாக உழைத்தும் வெற்றியை தொட முடியாத குழந்தைகளுக்காக தான் இந்த பதிவு... இனிமேல் தான் வாழ்க்கை ஆரம்பம் ஆகிறது தயவு செய்து எந்த வகையிலும் இந்த தோல்வி உங்களை பாதித்துவிடக்கூடாது.

தோல்வி அடைந்த பல பேர் தான் இன்று வாழ்க்கையில் பல சாதனைகளை புரிந்து இருக்கிறார்கள். அதனால் தேர்வு பெற்றவர்கள் மன மகிழ்ச்சியோடும் தேர்வு பெற முடியாதவர்கள் மனதிடத்தோடும் இந்த சூழ்நிலையை அணுக வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com