மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்துகாங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்துகாங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

பென்னாகரத்தில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து பென்னாகரம், ஏரியூர் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பென்னாகரம் வட்டார தலைவர் சண்முகம், ஏரியூர் வட்டார தலைவர் பெரியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். பென்னாகரம் நகர தலைவர் சுப்பிரமணி, பாப்பாரப்பட்டி நகர தலைவர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட துணைத்தலைவர் பெருமாள் கவுண்டர், மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், காங்கிரஸ் தொழிற்சங்க தலைவர் வெங்கடாசலம், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி காளியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பென்னாகரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்டேட் வங்கி வரை காங்கிரசார் ஊர்வலமாக வந்தனர். முடிவில் பென்னாகரம் வட்டார பொருளாளர் பழனி நன்றி கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com