பாப்பிரெட்டிப்பட்டியில்காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாப்பிரெட்டிப்பட்டியில்காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் வேலவன் தலைமை தாங்கினார். கடத்தூர் வட்டார தலைவர் வெங்கடாசலம், நகர தலைவர் மாணிக்கம், ராபர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளரும், முன்னாள் எம்.பி,யுமான தீர்த்தராமன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், அருணாசலம், சுகர் சக்திவேல், ரவிச்சந்திரன், ராமச்சந்திரன், மோகன் குமார், தண்டபாணி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாப்பிரெட்டிப்பட்டி நகர தலைவர் மாணிக்கம் நன்றி கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com