சுயநல அரசியலை மறைக்க பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு - தமிழிசை சவுந்தரராஜன்

மதம் சார்பற்றவர்கள் என்று இவர்களை அவர்களே முத்திரை குத்தி கொள்வார்கள் என தமிழிசை விமர்சித்துள்ளார்.
சுயநல அரசியலை மறைக்க பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு - தமிழிசை சவுந்தரராஜன்
Published on

சென்னை,

தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இன்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் தலைமையினான அரசிற்கான நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கான விவாதம் சட்டமன்றத்தில் தொடங்கி இருக்கிறது.... இதில் முதலில் பேசிய தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார் ... வேறு எந்த கட்சியும் ஆதரவை நினைப்பதற்கு முன்னாலேயே அவசர அவசரமாக சென்று ஆதரவை தெரிவித்து விட்டு தங்களது பதவி ஆசைக்காக அதுவரை இருந்த கூட்டணியை உடனே முறித்துக் கொண்டு இன்று பாஜக மறைமுகமாக ஆட்சியை கைப்பற்ற நினைத்தது என்றும் கவர்னர் ஆட்சி கொண்டுவர முயற்சி என்று தொடர்ந்து அவர் முதற்கொண்டு மற்றவர்களும் சொல்லுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது..

சுயநலத்திற்காக பல முடிவுகள் எடுத்துவிட்டு அதற்கு உள்நோக்கத்தோடு மறுபடியும் இல்லாத ஒரு கருத்தை பதிவு செய்வது அதுவும் பாஜக மீது குற்றம் சாட்டுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.. ஆக இவர்கள் இன்றும் பாஜகவை பற்றி பார்த்து எவ்வளவு பயந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.. மதம் சார்புள்ள நடவடிக்கைகளை ஆதரித்துக் கொண்டு ஆனால் மதம் சார்பற்றவர்கள் என்று இவர்களை அவர்களே முத்திரை குத்தி கொள்வார்கள்.

அதையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்... ஆக இன்று சட்டமன்றம் ஒற்றுமையை பதிவிடாமல் வேற்றுமையையும் வேறுபாட்டையும் விதைக்க ஆரம்பித்து இருக்கிறது என்பதை நேற்று நடந்தே பார்த்துக் கொண்டிருக்கிறோம்... மக்கள் மாற்றத்திற்காக வாக்களிக்கிறோம் என்று சொன்னார்களே தவிர இதே போல அரசியலில் பல தவறுகளை செய்தவர்களுக்கு புகலிடம் கொடுப்பதற்காக அல்ல.. வருங்கால தமிழகம் இதை உணர்த்தும்.. அவரைத் தொடர்ந்து பேசி வரும் மற்றவர்களும் இதே கருத்தை சொல்வது கண்டிக்கத்தக்கது

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com