தி.மு.க. எம்.பி.க்கள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு; கே.எஸ். அழகிரி

தி.மு.க. எம்.பி.க்கள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என கே.எஸ். அழகிரி தெரிவித்து உள்ளார்.
தி.மு.க. எம்.பி.க்கள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு; கே.எஸ். அழகிரி
Published on

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில், அமைதி திரும்புகிறது என்று அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் செய்தி பரப்பி கொண்டே, கடந்த 5-8-2019 முதல் காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரையும் கைது செய்து தொலைதொடர்புகளை துண்டித்து காஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை செயல்படுத்தி கொண்டிருப்பதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

காஷ்மீரத்து தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய கோரி வருகின்ற 22-8-2019 அன்று காலை 11 மணி அளவில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், தி.மு.க. எம்.பி.க்கள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கும் என அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com