வாக்குப்பதிவு இயந்திரம் வேண்டாம் என காங்கிரஸ் சொல்லவில்லை: ப.சிதம்பரம்

அரசியல் சாசனத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு மக்கள் 240 இடங்களை தந்துள்ளதால் மோடி இனி அரசியல் சாசனத்தை வணங்கித்தான் ஆக வேண்டும் என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு இயந்திரம் வேண்டாம் என காங்கிரஸ் சொல்லவில்லை: ப.சிதம்பரம்
Published on

சென்னை, 

சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் ஓர் இடத்தில் தயாரித்து வழங்கப்பட்ட கருத்து கணிப்புகள். அனைத்து தொலைக்காட்சிகளிலும் 350 முதல் 400 தொகுதிகள் வரை பா.ஜனதா வெற்றி பெறும் என வெளியிட்டு மக்களை முட்டாளாக்கியுள்ளனர். அதையெல்லாம் மீறி பா.ஜனதாவிற்கு நாட்டு மக்கள் அடக்கத்தை கற்றுத் தந்துள்ளனர். பிரதமர் மோடி நேருவுடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்கிறார்.

நேருவுடன் மோடியை ஒப்பிட்டுக் கெள்வதை நாங்கள் நிராகரிக்கிறோம். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், மிண்ணனு வாக்கு பதிவு எந்திரத்தை நிராகரிப்பதாக சொல்லவில்லை. ஈ.வி.எம். முறையில் வி.வி.பேட்டில் வரும் ஒப்புகை சீட்டை வாக்காளர்கள் தங்கள் கையால் எடுத்து மற்றொரு பெட்டியில் போடும் வகையில் சீர்திருத்தம் வேண்டும் என்பது தான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு.இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது தார்மீக வெற்றி, நரேந்திர மோடிக்கு கிடைத்தது தார்மீக தோல்வி. நாங்கள் எங்களது வெற்றியை கொண்டாடுகிறோம். அதில் மோடிக்கு என்ன பொறாமை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com