

மயிலாடுதுறை,
இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில், விஜய்யை முதல்-அமைச்சராக்க கவர்னர் அனுமதிக்காததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தினர். இப்படி இருக்கையில் மயிலாடுதுறையில் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. அப்போது போராட்டத்திற்கு வந்த திமுகவினர், காங்கிரஸ் கட்சியினரை சரமாறியாக தாக்கி உள்ளனர். பதிலுக்கு காங்கிரஸ் கட்சியினரும் கைகலப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
இன்று மயிலாடுதுறையில் ஆளுநரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை திமுகவினர் தாக்கியுள்ள செயல் கடுமையான கண்டனத்திற்குரியது. காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.