கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் நிர்வாகி சத்தியசீலன் வெட்டிக்கொலை! – செல்வப்பெருந்தகை கண்டனம்

கொலையாளிகளை கைது செய்து தகுந்த தண்டனையை பெற்றுத் தர வேண்டுமென செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் நிர்வாகி சத்தியசீலன் வெட்டிக்கொலை! – செல்வப்பெருந்தகை கண்டனம்
Published on

கிருஷ்ணகிரி,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜமுக்குட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி சத்தியசீலன் இன்று காலை தனது விவசாய நிலத்திற்கு சென்ற போது, சில மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சிக்கும், கண்டனத்திற்கும் உரியதாகும். இதுபோன்ற கொலைகள் ஆங்காங்கே நடந்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வந்தாலும் இது சம்மந்தமாக தீவிர விசாரணை செய்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்திய இந்தப் படுகொலை சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன். கொலையாளிகளை கைது செய்து தகுந்த தண்டனையை பெற்றுத் தர வேண்டுமென காவல்துறையினரை கேட்டுக் கொள்கிறேன்.

படுகொலை செய்யப்பட்ட காங்கிரஸ் நிர்வாகி சத்தியசீலன் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com