காங்கிரசார் அறவழி போராட்டம்

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் அறவழி போராட்டம் நடத்தினர்.
காங்கிரசார் அறவழி போராட்டம்
Published on

நேஷனல் ஹெரால்டு வழக்கில் 2-வது முறையாக சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர். இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் அறவழி போராட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்தும், அமலாக்கத்துறையினர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம் விசாரணை நடத்துவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com