எனக்கு மட்டும் காங்கிரஸ் கட்சியில் நெருக்கடி தருகின்றனர்: கராத்தே தியாகராஜன்

எனக்கு மட்டும் காங்கிரஸ் கட்சியில் நெருக்கடி தருகின்றனர் என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.
எனக்கு மட்டும் காங்கிரஸ் கட்சியில் நெருக்கடி தருகின்றனர்: கராத்தே தியாகராஜன்
Published on

சென்னை,

காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்டத் தலைவராக இருந்தவர் கராத்தே தியாகராஜன். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்து, திமுகவுடன் காங்கிரஸ் வைத்திருக்கும் கூட்டணிக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் இருந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை இன்று சந்தித்து பேசினார்.

தனது ஆதரவாளர்களுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு சென்ற கராத்தே தியாகராஜன், சிதம்பரத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கராத்தே தியாகராஜன் கூறியதாவது:-

நான் எந்த கட்சிக்கும் போக மாட்டேன். ராகுல் காந்தியின் விசுவாசமிக்க தொண்டனாகவே தொடர்வேன். எனக்கு மட்டும் காங்கிரஸ் கட்சியில் நெருக்கடி தருகின்றனர். ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நான் பேசவில்லை. மோடியை ஆதரித்து பேசிய விஜயதரணி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com