காங்கிரஸ் பிரமுகர் கைது

கோவில்பட்டியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் பிரமுகர் கைது
காங்கிரஸ் பிரமுகர் கைது
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரை சேர்ந்தவர் சேகர். காங்கிரஸ் பிரமுகர். ஆதிதிராவிட மக்களுக்கு கொடுத்த இலவச வீட்டு மனை பட்டா இடங்களை முறையாக அளந்து கொடுக்க கோரி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து நேற்று தாலுகா அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் வந்தனர். அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும் இடையூறு செய்ததாக சேகரை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com