கறிவிருந்தில் துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய காங்கிரஸ் பிரமுகர் கைது

கறிவிருந்தில் துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய காங்கிரஸ் பிரமுகர் கைது.
கறிவிருந்தில் துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய காங்கிரஸ் பிரமுகர் கைது
Published on

மதுரை,

மதுரை மாவட்டம் டி.கொக்குளம் கிராமத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் தனசேகரன். இவர் நேர்த்திக்கடனுக்காக திருமங்கலம் காட்டு பத்திரகாளி அம்மன் கோவிலில் கிடாய் வெட்டி கறி விருந்து வைத்துள்ளார். இதையொட்டி அவரது நண்பர்கள், ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். கறிவிருந்தில் மதுரை கீழபனங்காடியை சேர்ந்த வேதகிரி (வயது41) உள்பட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில் சிலர் கோவில் அருகே உள்ள ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த வேதகிரி, காரில் வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து வந்து சுட்டு, மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பற்றி அறிந்த திருமங்கலம் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மதுரையில் வேதகிரியை நள்ளிரவில் கைது செய்தனர். வேதகிரி வக்கீலாகவும், காங்கிரஸ் கட்சி பிரமுகராகவும் இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com