

திருச்சி:
திருச்சியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், முதலில் யார் குத்துவிளக்கு ஏற்றுவது என்பதில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் மற்றும் திருவெறும்பூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. நவல்பட்டு விஜி இடையே சலசலப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சியில் நடைபெற்ற இந்த சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் ரமேஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா தொடக்கமாக குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது முதலில் குத்துவிளக்கு ஏற்றுவது யார் என்பது தொடர்பாக கிறிஸ்டோபர் திலக் மற்றும் நவல்பட்டு விஜி ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விழா அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
இதையடுத்து, அமைச்சர் ரமேஷ் இருவரிடமும் பேசி சமாதானம் செய்தார். தொடர்ந்து, நவல்பட்டு விஜி குத்துவிளக்கு ஏற்றினார். ஆனால், கிறிஸ்டோபர் திலக் குத்துவிளக்கு ஏற்றாமல் விழாவில் பங்கேற்றார். இதனால் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விழா வழக்கம்போல் தொடர்ந்து நடைபெற்றது.