பா.ஜனதா அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட முயற்சி

பா.ஜனதா அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட முயற்சி செய்தனர்.
பா.ஜனதா அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட முயற்சி
Published on

ராகுல்காந்தியை பத்து தலை ராவணன் போல் அவதூறாக சித்தரித்து பேசியதை கண்டித்து புதுக்கோட்டை திருவப்பூரில் பா.ஜனதா அலுவலகத்தை வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி பா.ஜனதா அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. அலுவலகத்திற்கு முன்பாகவே இரும்பு தடுப்புகள் வைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பா.ஜனதா அலுவலகத்தை ஜோதிமணி எம்.பி. தலைமையில் முற்றுகையிட வந்த மாவட்ட தலைவர்கள் முருகேசன், சுப்புராம் மற்றும் நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு சிறிது நேரம் கோஷமிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். அதேநேரத்தில் பா.ஜனதா அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஜோதிமணி எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். இந்தியா கூட்டணி உறுதியாக உள்ளது. ராகுல்காந்தி மீது எந்தவிதமான விமர்சனங்களை வைத்தாலும் அதனை தகர்த்து அவர் பிரதமராவார். தமிழகத்தில் நோட்டாவுடன் தான் பா.ஜனதா போட்டியிடுகிறது. நான் கரூரில் மீண்டும் போட்டியிடுவேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com