

சென்னை,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது;-
7 பேர் விடுதலை தொடர்பாக ஜனாதிபதிக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. தமிழர்கள் என்ற அடிப்படையில் 7 பேரை விடுதலை செய்வதில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்றார்.