காங்கிரஸ் கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்

போராட்டம்
காங்கிரஸ் கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்
Published on

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டு தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி, எம்.பி. பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனை கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஈரோடு மூலப்பாளையத்தில் மனித சங்கிலி போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டார்கள். சில மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட்டதால், ஈரோடு ரெயில் நிலையம் முன்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் நேற்று குவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com