காங்கிரஸ் கட்சியினர் அறவழி போராட்டம்

சுரண்டையில் காங்கிரஸ் கட்சியினர் அறவழி போராட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் கட்சியினர் அறவழி போராட்டம்
Published on

சுரண்டை:

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை, எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சுரண்டையில் அறவழி சத்தியாகிரக போராட்டம் நடந்தது. பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளரும், ஒன்றிய கவுன்சிலருமான முரளிராஜா, சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன், சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் எஸ்.ஆர்.பால்துரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் சிவராமகிருஷ்ணன், சட்டநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com