மத்திய அரசை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரதம்

காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
மத்திய அரசை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரதம்
Published on

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் (ஊடக பொறுப்பாளர்) ஆ.கோபண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஆராய்ச்சி துறை சார்பில் மத்திய பா.ஜனதா அரசின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் 23-ந் தேதி (இன்று) சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் நடைபெறுகிறது.

அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மேகாலயா மாநிலங்களின் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் டாக்டர் ஏ.செல்லக்குமார் காலை 9.30 மணியளவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாலை 4 மணியளவில் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்து நிறைவுரையாற்றுகிறார்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com