இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: காங்கிரஸ் கட்சி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கைது

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், காங்கிரஸ் கட்சியின் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.
கவுன்சிலர் கைது
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காங்கிரஸ் கட்சி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதம்புத்தூரைச் சேர்ந்த ஹரிநாராயணன், காங்கிரஸ் கட்சியின் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆவார். வழக்கறிஞரான இவர் மெட்ரிக் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

ஹரிநாராயணன் நடத்தி வரும் நிறுவனத்தில் ஒரு இளம்பெண் பணியில் சேர்ந்துள்ளார். அந்த இளம்பெண்ணுக்கு அவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிநாராயணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com