

நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகர் மாவட்ட வடக்கு மண்டல காங்கிரஸ் சார்பில் வெட்டூர்ணிமடத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு மத்திய அரசு விற்பதாக கூறியும், அதற்கு கண்டனம் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு நாகர்கோவில் வடக்கு மண்டல தலைவர் செல்வன் தலைமை தாங்கினார். போலிங் பூத் கமிட்டி மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
---