காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சேர்ந்தமரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

சுரண்டை:

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து சுரண்டை அருகே சேர்ந்தமரத்தில் மேலநீலிதநல்லூர் வட்டார காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் எஸ்.பி.முருகையா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் விஜயன் வியாகப்பன், டேவிட்துரை, முருகையா, புளியங்குடி பால்ராஜ், சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் எஸ்.ஆர்.பால்துரை தொகுத்து வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.பழனிநாடார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிங்கக்குட்டி, முருகன், சுப்பிரமணியன், செந்தூர்பாண்டியன், சேர்மசெல்வம், தாயார் தோப்பு ராமர், தேவேந்திரன், பிரபாகர், அமுதா சந்திரன், அருணாசலம் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com