காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

பொள்ளாச்சி

கோவை மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடி, ராமேஸ்வரம், திருச்செந்தூர் விரைவு ரெயில்களை பொள்ளாச்சி வழியாக இயக்க வேண்டும். வேலைக்கு செல்பவர்கள் வசதிக்காக கோவை-சேலம் மெமு ரெயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும். பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ஏற்கனவே இருந்த கோவில்பாளையம் ரெயில் நிலையத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். கிணத்துக்கடவில் ரெயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தொடர்பாக பாலக்காடு, சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகங்களை வலியுறுத்தி பொள்ளாச்சி ரெயில் நிலையம் முன் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகெண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com