நீடாமங்கலத்தில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நீடாமங்கலத்தில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீடாமங்கலத்தில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

நீடாமங்கலம்:

சமையல் கியாஸ் விலை உயர்வைக் கண்டித்து திருவாரூர் மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் நீடாமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் மகளிர் அணி தலைவி டாக்டர் நிரோஷா கிஷோர், மாவட்ட பொதுச்செயலாளர் அன்பு வே.வீரமணி, வட்டார காங்கிரஸ் தலைவர் பாபு மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டு சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com