நீடாமங்கலத்தில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து நீடாமங்கலத்தில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீடாமங்கலத்தில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

நீடாமங்கலம்:

நீடாமங்கலத்தில் திருவாரூர் மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் வீரமணி தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி தலைவி டாக்டர் நிரோஜா கிஷோர், மன்னார்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நெடுவை குணசேகரன், மாவட்ட துணை தலைவர்கள் கலியபெருமாள், குமார், வட்டார தலைவர் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் வடுகநாதன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சக்திவேல்முருகன் மற்றும் திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக மகளிர் காங்கிரசார் நீடாமங்கம் அண்ணாசிலையில் இருந்து இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரியார் சிலையை வந்தடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com