காங்கிரஸ் கட்சியினர் பேரணி

மானூரில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.
காங்கிரஸ் கட்சியினர் பேரணி
Published on

மானூர்:

மானூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல் காந்தி நடத்திய பாதயாத்திரையின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி வெற்றி பேரணி நேற்று நடைபெற்றது. மானூர் தபால் நிலையம் முன்பிருந்து தொடங்கி, பஜார் வழியே சென்று மானூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. இந்த பேரணிக்கு நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்புரையாற்றினார். பின்னர் நடைபெற்ற கூட்டத்திலும் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை தாங்கி பேசினார். இதில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாநில பொதுக்குழு உறுப்பினர் முரளிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com