காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்

சுரண்டையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
Published on

சுரண்டை:

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து சுரண்டையில் நகராட்சி தலைவர் ப.வள்ளிமுருகன் தலைமையில் காங்கிரசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகர தலைவர் ஜெயபால், மாவட்ட துணைத் தலைவர் பால் என்ற சண்முகவேல், மாநில பேச்சாளர் பால்துரை, வட்டார தலைவர்கள் முருகையா, கணேசன், ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழப்பாவூர் நகரப்பஞ்சாயத்து துணைத் தலைவர் ராஜசேகர், மகளிர் அணி சேர்மக்கனி, கவுன்சிலர்கள் அமுதா சந்திரன், வேல் முத்து, சாம்பவர்வடகரை நகரத்தலைவர் பழனிகுமார், தாயார் தோப்பு ராமர், கந்தையா, பாலகணேஷ்சங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தகவல் அறிந்ததும் சுரண்டை போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை கைது செய்தனர். பின்னர் இரவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com