காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்

பேரணாம்பட்டில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
Published on

பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்தி எம்.பி.க்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராகுல்காந்தி எம்.பி. பதபியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நேற்று மாலை பேரணாம்பட்டு போலீஸ் நிலையம் அருகில் வேலூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமையில், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி, நகர காங்கிரஸ் தலைவர் முஜம்மில் அஹம்மத், ஒன்றிய தலைவர் சங்கர் உள்பட 25 பேர் கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் மற்றும் போலீசார் சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 25 பேரை கைது செய்தனர். பின்னர் மாலை 6.30 மணியளவில் விடுவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com