காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்

உடன்குடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.
காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
Published on

உடன்குடி:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை, எம்.பி. பதவி நீக்கம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து உடன்குடி மெயின் பஜார் சந்திப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட தலைவருமான சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் துரைராஜ் ஜோசப், மாநில, மாவட்ட முன்னாள் பொருளாளர் நடராஜன், லெட்சுமிபுரம் பஞ்சாயத்து தலைவர் ஆதிலிங்கம், உடன்குடி நகர தலைவர் முத்து, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிந்தியா, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் முத்துகுமார், திருச்செந்தூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் தனுஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் வந்தனர். அனுமதியின்றி சாலைமறியலில் ஈடுபட்டதாக 29 பேரை போலீசார் கைது செய்து பேரூராட்சி திருமண மண்டபத்தில் அடைத்தனர். அவர்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து பேசினார்.

கோவில்பட்டியில் காங்கிரசார் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் மாறன், மாவட்ட செயலாளர்கள் துரைராஜ், ஜோஸ்வா மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com