கொடநாடு விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதிக்க காங்கிரஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்

கொடநாடு விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதிக்க காங்கிரஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளது.
கொடநாடு விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதிக்க காங்கிரஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை கடந்த 3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று கூட உள்ளது. இதில், துறைகள் வாரியாக மானிய கோரிக்கை விவாதம் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் நீர்வளத்துறை மீதான விவாதம் நடக்கிறது.

இதற்கிடையில், கொடநாடு கொலை விவகாரம் தற்போது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தில் கொடநாடு விவகாரம் தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியானது.

இந்நிலையில், கொடநாடு விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதிக்க காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.

கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கான மனு காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் கொடநாடு விவகாரம் குறித்து தமிழக சட்டசபையில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என எதிர்பார்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com