மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். நாகர்கோவில் கோட்டாரில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் விஜய்வசந்த் எம்.பி. கலந்து காண்டார்.
மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
Published on

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். நாகர்கோவில் கோட்டாரில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் விஜய்வசந்த் எம்.பி. கலந்து காண்டார்.

விழிப்புணர்வு பிரசாரம்

குமரி மாவட்டத்தில் நடை பயணம் மேற்கொண்ட பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் கட்சி பற்றியும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பற்றியும் விமர்சனம் செய்தார். எனவே அண்ணாமலை பேச்சுக்கும், மத்திய அரசுக்கும் கண்டனம் தெரிவித்தும், காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள் பற்றியும் எடுத்துரைக்கும் வகையில் நாகாகோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மண்டல அளவிலான விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடந்தது. அதன்படி மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமையில் 8 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் கூட்டம் நடத்தியும், வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பேசினர்.

கோட்டார் சவேரியார் ஆலய சந்திப்பில் நடந்த பிரசாரத்தில் விஜய்வசந்த் எம்.பி. பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதே போல ராமன்புதூர், பெருவிளை, அறுகுவிளை, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி உள்பட 8 இடங்களில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

ஆரல்வாய்மொழி

இதுபோல் ஆரல்வாய்மொழியில் நகர காங்கிரஸ் சார்பில் விழிப்புணர்வு பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர காங்கிரஸ் தலைவர் அஸ்வின் ஆமோஸ் தலைமை தாங்கினார். தோவாளை கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் அந்தோணிமுத்து சிறப்புரையாற்றினார். இதில் நகர செயல் தலைவர் விக்னேஷ், மாவட்ட அமைப்பு செயலாளர் ஆரல் சுதாகர், வட்டார பொருளாளர் செல்வா, பொதுச்செயலாளர்கள் நாராயணன், ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாடி சேந்தன்புதூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர காங்கிரஸ் தலைவர் மயிலை நடேசன் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார பொருளாளர் நாகராஜன், மாவட்ட துணைத் தலைவர் தங்கம் நடேசன், மாநில பேச்சாளர் அந்தோணிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் காலபெருமாள் தொடங்கி வைத்தார். இதில் கன்னியாகுமரி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருண் டிசாசோ மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

அஞ்சுகிராமம்

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் அஞ்சுகிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் வக்கீல் சாம் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருண் டிசாசோ முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அஞ்சுகிராமம் நகர காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ராஜ், காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தியா ராயப்பன், விக்டோரியா, மெரின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திட்டுவிளை

இதுபோல் பூதப்பாண்டி பேரூர் காங்கிரஸ் சார்பில் திட்டுவிளை பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பூதப்பாண்டி பேரூர் காங்கிரஸ் தலைவர் ராபி தலைமை தாங்கினார். வட்டார துணை தலைவர் மரிய ஜாண்சன், முகமது ராபி ஆல்பர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தோவாளை வட்டார காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் செல்வராஜ் பங்கேற்றார். இதில் கஷன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கலீல் ரகுமான் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com