நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிக்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதே காங்கிரஸ் நிலைபாடு- கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிக்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்று சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிக்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதே காங்கிரஸ் நிலைபாடு- கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
Published on

ஆள்மாறாட்டம்

சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் உள்ள அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியா கூட்டணியின் ஒற்றுமை, வலிமை, உரிமையை மகளிர் உரிமை மாநாடு வெளிப்படுத்தியுள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியிருந்தாலும் அதனை அமல்படுத்துவதில் சிக்கல் உள்ளது. முதலில் மக்கள் தொகை கணக்கீடு செய்ய வேண்டும். அதன் பின்னர் தொகுதி சீரமைக்கப்பட வேண்டும். அதன் பின்னரே அமல்படுத்த முடியும். சோனியாகாந்தி கட்சியின் தலைவி என்பதால் ஒற்றுமையாக செயல்படுங்கள் என கூறியது வழக்கமான அறிவுரையே. மேலும் மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் நீட் தேர்வின்போது அபத்தமாக சோதனை செய்துவிட்டு இந்த தேர்வில் எப்படி விட்டார்கள் என்பது தெரியவில்லை. ஆள் மாறாட்ட விவகாரம் என்பது மத்திய அரசின் நிர்வாக கட்டுப்பாடு மோசமான நிலையில் உள்ளது என்பதையே காட்டுகிறது.

9 தொகுதிகளில்...

சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற கட்சி ஆலோசனை கூட்டம் குறித்த கேள்விக்கு உட்கட்சி விவரங்களை பற்றி நிர்வாகிகள் பேசியதை பத்திரிக்கை வாயிலாக வெளிப்படுத்துவது நாகரிகமல்ல.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 39 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றிபெறும். கடந்த தேர்தலைபோல் இந்த முறையும் 9 தொகுதிக்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com