மாமல்லபுரத்தில் காங்கிரஸ் பயிற்சி முகாம்: சென்னை வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு

ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ராகுல் காந்தி
Published on

தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பயிற்சி முகாமின் நிறைவுநாளான இன்று (சனிக்கிழமை) நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் ராகுல் காந்திக்கு வரவேற்பு அளித்தனர். தொண்டர்களும் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

நிர்வாகிகளை சந்திக்கிறார்

பின்னர் மாவட்டத் தலைவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்க மாமல்லபுரத்திற்கு ராகுல் காந்தி புறப்பட்டு சென்றார். பயிற்சி முகாமில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார். பின்னர், மாவட்டத் தலைவர்களின் குடும்பத்தினரை சந்திக்கிறார். மாலை 4 மணியளவில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாடுகிறார்.

அதேபோன்று, கோவை மற்றும் சேலம் பகுதிகளில் நீட் தேர்வால் பலியான 4 மாணவ-மாணவிகளின் பெற்றோரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. பின்னர் சென்னை வந்து இரவு 7 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com