2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அதிக இடங்களை கேட்போம்- விஜய் வசந்த்


2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அதிக இடங்களை கேட்போம்- விஜய் வசந்த்
x

2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது என விஜய் வசந்த் தெரிவித்தார்

கன்னியாகுமரி,

நாகர்கோவிலில் விஜய்வசந்த் எம்.பி. செய்தியளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறிய தாவது,

நம் நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து பணி வேகமாக நடக்கிறது. மழை காரணமாக வேலை தாமதம் ஏற்பட்டது.

வேகப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணி வலுவாக கூட்டணியாக உள்ளது. வெற்றி கூட்டணியாக உள்ளது. தேர்தல் தொடர்பாக தலைவர்களை சந்தித்து அதற்கான நல்ல முடிவை தருவார்கள். வரும் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அதிக இடங்கள் கேட்டு கோரிக்கை வைப்போம்.ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்க வேண்டும் என்று தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். பேச்சுவார்த்தையில் இது தொடர்பாக முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story