காங்கிரஸ் இறுதியில் அவமானத்தையே சந்திக்கும் - பாஜக விமர்சனம்

தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.
காங்கிரஸ் இறுதியில் அவமானத்தையே சந்திக்கும் - பாஜக விமர்சனம்
Published on

சென்னை,

சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க., ஆட்சியமைக்க பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ஆதரவு கேட்டு தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் வி.சி.க.வுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

த.வெ.க.வுக்கு கம்யூனிஸ்டு கட்சிகள், வி.சி.க. ஆதரவு அளிக்குமா? அல்லது அதனை தட்டிக்கழிக்குமா? என்பது புரியாத புதிராகவே தொடருகிறது. தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகி, த.வெ.க. ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ளது. காங்கிரசின் இந்த முடிவுக்கு திமுக, பாஜக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.

இந்த நிலையில், பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், "தமிழ்நாட்டில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை காலம் மட்டுமே சொல்லும்; ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்; காங்கிரஸ் இறுதியில் அவமானத்தையே சந்திக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com