பாம்பனில் புதிய தூக்குப்பால உபகரணங்களை இணைக்கும் பணி தொடக்கம்

பாம்பனில் புதிய தூக்குப்பாலத்திற்கான உபகரணங்களை இணைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
பாம்பனில் புதிய தூக்குப்பால உபகரணங்களை இணைக்கும் பணி தொடக்கம்
Published on

பாம்பன்

பாம்பனில் புதிய தூக்குப்பாலத்திற்கான உபகரணங்களை இணைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

புதிய ரெயில் பாலம்

பாம்பன் கடலில் ரூ.450 கோடி நிதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணியானது கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகவே நடைபெற்று வருகின்றது. அதற்காக கடலுக்குள் தூண்கள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன. மேலும் மண்டபம் பகுதியில் உள்ள பாலத்தை நுழைவு பகுதியில் இருந்து மையப் பகுதியில் புதிய தூக்கு பாலம் அமையுள்ள பகுதி வரையிலும் தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் அமைக்கும் பணிகளும் முழுமையாக முடிந்து விட்டன.

ஆய்வு

இந்த நிலையில் பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தின் மையப் பகுதியில் அமைய உள்ள புதிய தூக்குப்பாலத்திற்கான உபகரணங்கள் தனித்தனியாக கனரக சரக்கு வாகனம் மூலம் பாம்பன் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அதை கிரேன் மூலம் ஒன்று சேர்க்கும் பணியானது நடைபெற்று வருகின்றது. உபகரணங்கள் அனைத்தும் ஒன்று சேர்க்கும் பணிகள் முடிவடைந்த பின்னர் புதிய தூக்கு பாலமானது கிரேன் மூலம் மையப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பொருத்தும் பணியானது நடைபெறும்.

இந்த உபகரணங்களை ஒன்று சேர்த்து தூக்குப்பாலத்தை வடிவமைக்கும் பணிகள் முடிவடைய இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகின்றது. இதனிடையே கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ரெயில் போக்குவரத்து நடைபெறாமல் உள்ள பழைய பாம்பன் ரயில் பாலம் மற்றும் தூக்கு பாலத்தையும் மற்றும் அருகில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தின் பணிகளையும் நேற்று தெற்கு ரயில்வே பாலங்களின் தலைமை பொறியாளர் ஸ்மித் செங்கால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com