பூலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம்

தம்மணம்பட்டியில் பூலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
பூலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம்
Published on

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே தம்மணம்பட்டி கிராமத்தில் பூலோகநாயகி உடனமர் பூலோகநாதர் கோவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 21-ந் தேதி முகூர்த்த கால் நடுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உள்பட பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக யாகசாலையில் இருந்து தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோவில் கோபுர கலசங்கள் மற்றும் மூலவர்களுக்கு அர்ச்சகர்கள் புனிதநீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com