திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்-நாளை நடக்கிறது

திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்-நாளை நடக்கிறது
Published on

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.

கும்பாபிஷேக விழா

திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர். இங்கு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு 8 உப கோபுரங்களுடனும், 3 தளங்களுடனும், அஷாடங்க திவ்ய விமானம் அமையப்பெற்ற இக்கோவில் தென் தமிழகத்தில் புகழ் பெற்ற கோவிலாக உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக தெப்பத் திருவிழா புகழ் பெற்றதாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தது.

இதையடுத்து நாளை காலை கும்பாபிஷேகம் விழா நடக்கிறது. முன்னதாக கடந்த 23-ந்தேதி இரவு முதற்கால யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து இரண்டாம் காலமும், மாலை 4 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று 25-ந் தேதி காலை நான்காம் கால யாகசால பூஜையும், மாலையில் ஐந்தாம் காலை யாகசாலை பூஜையும் நடைபெற்றது. இன்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜையும், மாலை 3 மணிக்கு ஏழாம் காலை யாகசாலை பூஜையும் நடக்கிறது. நாளை காலை எட்டாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

திருவீதி உலா புறப்பாடு

அதைத்தொடர்ந்து யாகசாலை மண்டபத்தில் இருந்து கடம்புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 9.38 மணி முதல் 10.32 மணிக்குள் கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் 11.50 மணிக்கு ஸ்வர் தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்று இரவு 9மணிக்கு சவுமிய நாராயண பெருமாள் தங்க கருட வாகனத்திலும், திருக்கோஷ்டியூர் நம்பிகள் மற்றும் எம்பெருமானார் தங்க பல்லக்கில் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருக்கோஷ்டியூர் தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியான் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com