காவிரி பிரச்சினையில் விரைவில் ஒருமித்த கருத்து ஏற்படும்- தேவகவுடா நம்பிக்கை

காவிரி பிரச்சினை குறித்து இரண்டு மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார்.
காவிரி பிரச்சினையில் விரைவில் ஒருமித்த கருத்து ஏற்படும்- தேவகவுடா நம்பிக்கை
Published on

திருச்சி,

 முன்னாள் பிரதமர் தேவகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான்காண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்துள்ளேன். எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தாலும் இந்திய மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். கருணாநிதி நினைவு நாணயம் வெளியிட்டது குறித்து உள்ளிட்ட எந்தவித அரசியல் குறித்தும் கருத்து சொல்ல விரும்பவில்லை. காவிரி பிரச்சினை குறித்து தமிழ்நாட்டில் உள்ள ஆட்சியாளர்களுக்கும் இதற்கு முன்பு ஆண்டவர்கள் அனைவருக்கும் முழுமையான விவரங்கள் தெரியும்.

காவிரி பிரச்சினை குறித்து இரண்டு மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படும் அந்த நாள் விரைவில் வரும் அன்று அந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.பெங்களூரில் மட்டும் ஒரு கோடியே 40 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் சரியான குடிநீர் கிடைக்காமல் அவதி அடைகின்றனர். பெங்களூரு உள்ளிட்ட 9 மாவட்டங்கள் குடிநீருக்காக மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com