கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட 10,174 விண்ணப்பங்கள் பரிசீலனை

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட 10,174 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட 10,174 விண்ணப்பங்கள் பரிசீலனை
Published on

தகுதி இருந்தும்...

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து, தகுதி இருந்தும் இத்திட்டத்தில் பயன்பெறாத குடும்ப தலைவிகள் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு வாய்ப்பு வழங்கியது. இதற்கென்று பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டது.

அதனடிப்படையில் இதுவரை மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்து 174 நபர்கள் மேல்முறையீட்டு விண்ணப்பங்களை வழங்கியுள்ளார்கள். இந்த மேல்முறையீட்டு மனுக்களை பரிசீலனை செய்வதற்கு பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி தலைமையில் அனைத்து சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டு, உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்

இந்த உதவி மையம் மூலம் மேல்முறையீடு செய்துள்ள விண்ணப்பதாரர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் மற்றும் கள ஆய்வின் அடிப்படையிலும் தகுதியான மேல்முறையீட்டாளர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கிடும் பணிகள் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை 7538835100, 7538863100, 7358316100, 7358472100, 7358572100, 7397548100, 8148552101, 7358486100, 7353652100, 7397314100, 7397273100 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com