குழந்தைகளின் நலனை கருதி வெளியே சுற்றுவதை தவிருங்கள் - பொதுமக்களுக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்

குழந்தைகளின் நலனை கருதி வெளியே சுற்றுவதை தவிருங்கள் என்று பொதுமக்களுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குழந்தைகளின் நலனை கருதி வெளியே சுற்றுவதை தவிருங்கள் - பொதுமக்களுக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 1,821 பேரில் 104 பேர் 12 வயதுக்கும் குறைந்த குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது. ஒரு தவறும் செய்யாத குழந்தைகள் குடும்பத்தினரின் அலட்சியத்தால் கொரோனா வைரஸ் நோய் கொடுமைக்கு ஆளாகியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 90 சதவீதத்துக்கும் கூடுதலானவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடமிருந்து நோய்த் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாவது மிகவும் கொடுமையானது ஆகும். குழந்தைகளின் இந்த நிலைக்கு யார் காரணம்? என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இந்தநிலைக்கு நிச்சயம் குழந்தைகள் காரணமல்ல. அனைவரும் ஊரடங்கை மதித்து வீட்டில் அடங்கியிருந்தாலோ, வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்திருந்தாலோ குழந்தைகளுக்கு இத்தகைய நோய்த்தொற்று பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும்.

எனவே, சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள அனைவரும் தங்களின் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நலன் கருதி வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.

அதேபோல், சென்னைவாசிகள் கோயம்பேடு சந்தைக்கு செல்வதை தவிர்த்து, அந்தந்த பகுதிகளுக்கு வரும் நடமாடும் கடைகளிலும், ஆன்-லைனிலும் காய்கறிகளை வாங்கி கொரோனா நோய்ப்பரவலுக்கு ஆளாவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com