முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பு விழா

புளியங்குடி மனோ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பு விழா நடந்தது.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பு விழா
Published on

புளியங்குடி:

புளியங்குடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் கண்ணன் தலைமை தாங்கினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர் சாக்ரடீஸ் சிறப்புரையாற்றினார். ஜே.பி. கல்லூரியின் முதல்வர் மைக்கேல் மரியதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஆங்கிலத்துறை பேராசிரியர் ரஞ்சித் குமார் வரவேற்றார். வணிக மேலாண்மைத்துறைத் தலைவர் கணேசன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மற்றும் மாணவ மாணவியர் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com