தண்டவாளத்தில் பாறாங்கற்களை போட்டு சென்னை ரெயிலை கவிழ்க்க சதி

தண்டவாளத்தில் பாறாங்கற்களை போட்டு சென்னை ரெயிலை கவிழ்க்க சதி.
தண்டவாளத்தில் பாறாங்கற்களை போட்டு சென்னை ரெயிலை கவிழ்க்க சதி
Published on

நாகர்கோவில்,

சென்னையில் இருந்து நாகர்கோவில் வழியாக குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு நாகர்கோவில் அருகே இரணியல்-குழித்துறைக்கு இடையே உள்ள பாலோடு பகுதியை சென்றடைந்தபோது ரெயில், தண்டவாளத்தில் கிடந்த மர்மபொருள் மீது பலமாக மோதியது. பயங்கர சத்தமும் கேட்டு அதிர்வலைகள் உருவானது. இதனால் ரெயிலில் தூங்கிய பயணிகள் திடுக்கிட்டு எழுந்தனர். இருப்பினும் டிரைவர் ரெயிலை நிறுத்தாமல் இயக்கி சென்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக என்ஜின் டிரைவர் உடனே நாகர்கோவில் ரெயில்வே அதிகாரிகளுக்கும், ரெயில்வே போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். விசாரணையில் ரெயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்தது தெரியவந்தது. இந்த சதி குறித்து ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே குடிபோதையில் தண்டவாளத்தில் பாறாங்கல்லை போட்ட ஆலஞ்சி பாறவிளை பகுதியை சேர்ந்த கொத்தனாரான லெனின் என்ற சூர்யா (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com