ரெயிலை கவிழ்க்க சதி..? - திருத்தணி ரெயில் நிலையம் அருகே அதிர்ச்சி

ரெயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா என்ற கோணங்களில் ரெயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரெயில் நிலையம் அருகில் ரெயில் தண்டவாளங்கள் இணைக்க முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், தகவலறிந்து சென்ற ரெயில்வே ஊழியர்கள் ரெயில் நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள தண்டவாளத்தில்சிமெண்ட் கல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து தண்டவாளத்தில் இருந்த கல்லை அகற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது . இது குறித்து தகவலறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ரெயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா என்ற கோணங்களில் ரெயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி ரெயில் நிலையம் அருகில் உள்ள தண்டவாள இணைப்பு பகுதியில் மர்ம நபர் சிமெண்ட் கல் வைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story






