அரக்கோணம் அருகே ரெயிலை கவிழ்க்க சதி: எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது

தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்ட் வைக்கப்பட்டு இருந்தது.
அரக்கோணம் அருகே ரெயிலை கவிழ்க்க சதி: எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது
Published on

சென்னை,

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ரெயில் தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்ட் வைக்கப்பட்டு இருந்தது. தக்க சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அவை அப்புறப்படுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதாவது, அவ்வழியாக செல்லவிருந்த திருப்பதி பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது.

மேல்பாக்கம் வளைவு பகுதியில் 5 இடங்களில் தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்ட் வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக ரெயில்வே போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என்பது குறித்தும், ரெயிலை கவிழ்ப்பதற்கு சதியா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com