தொகுதி மறுவரையறை தோல்வி; கூட்டணி கட்சிகளின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி - செல்வப்பெருந்தகை

மசோதாவை தோல்வியடைய செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டுகளை செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை தோல்வி; கூட்டணி கட்சிகளின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி -  செல்வப்பெருந்தகை
Published on

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இன்று மக்களவையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை மசோதா வாக்கெடுப்பில் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது என்பது ஜனநாயகத்தின் மாண்பை வெளிப்படுத்தும் முக்கிய தருணமாகும். மக்கள் நலனையும், சமச்சீரான பிரதிநிதித்துவத்தையும் காக்கும் நோக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியும், தி.மு.க. உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சிகளும் எடுத்த உறுதியான முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். தொகுதி மறுவரையறை மசோதாவை தோல்வியடைய செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொதுநலனை முன்னிலைப்படுத்தி செயல்படுவது தான் உண்மையான ஜனநாயகப் பொறுப்பு. அந்த வகையில், இந்த வெற்றி தென்னிந்திய மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

இந்த சாதனையை முன்னெடுத்த அனைத்து இந்திய கூட்டணி கட்சிகளுக்கும் வாழ்த்துகள். வரும் காலங்களில் மக்கள் நலனுக்காக உறுதியாக செயல்பட்டு, ஒரணியில் திரண்டு மத்திய பாஜக அரசு கொண்டு வரும் மக்கள் விரோத மசோதாக்களை எதிர்கொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com