தமிழ்நாட்டு எம்.பி.க்களின் உதவியால் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டது - கார்கே

சமூகநீதியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் மகத்தான தலைவர் மு.க.ஸ்டாலின் என மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
தமிழ்நாட்டு எம்.பி.க்களின் உதவியால் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டது - கார்கே
Published on

ஒசூர்,

ஓசூரில் முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் பரப்புரையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே கலந்துகொண்டு பேசியதாவது:-

சமூக நீதிக் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். பெரியார், அண்ணா, கலைஞர் இந்தியாவுக்கே கண்ணியம், பகுத்தறிவு ஆகியவற்றை கற்றுக் கொடுத்தவர்கள். அவர்களின் மண் இது.

தமிழ்நாட்டு எம்.பி.க்களின் உதவியால் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டது.

எப்போதும் சத்தியத்தின் மீது நம்பிக்கை கொண்ட இயக்கம் திமுக.ஒட்டுமொத்த நாடும் ஸ்டாலின் பின்னால் நிற்கிறது.

சமூகநீதியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் மகத்தான தலைவர் மு.க.ஸ்டாலின். காங். திமுக மகளிருக்கு எதிரான கட்சிகள் இல்லை. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்க்கவில்லை. மோடி என்றாலே பொய் என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com