தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம்: “ஓடும் நீரில் கோலம் போடும் வீண் முயற்சி” – இன்பதுரை

இந்த கூட்டத்தை திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.
தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம்: “ஓடும் நீரில் கோலம் போடும் வீண் முயற்சி” – இன்பதுரை
Published on

சென்னை,

தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம் “ஓடும் நீரில் கோலம் போடும் வீண் முயற்சி” என்று அதிமுக எம்.பி. இன்பதுரை விமர்சித்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டம்

தொகுதி மறுவரையறை மசோதாவை விரைவில் மத்திய அரசு தாக்கல் செய்யலாம் என்று பேசப்படும் நிலையில், இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி எம்பிக்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல் அமைச்சர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தை திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. இந்நிலையில், இது குறித்து அதிமுக எம்.பி. இன்பதுரை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

வீண் முயற்சி

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வருடா வருடம் தமிழ்நாடு பெற்றுவரும் காவிரி உரிமை நீரை, இந்த ஆண்டு பெற்றுத் தரும் திறன் இல்லாத முதல்-அமைச்சர் விஜய்யால் கூட்டப்பட்ட, தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம் என்பது ஓடும் நீரில் கோலம் போடும் வீண் முயற்சியாகும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com