தொகுதி மறுவரையறை: தி.மு.க.வின் போராட்டம் அர்த்தமற்றது: டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா பேட்டி

தி.மு.க.வினர் பெண்கள் முன்னேற வேண் டாம் என்று நினைக்கிறார்கள் என டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா கூறியுள்ளார்.
தொகுதி மறுவரையறை: தி.மு.க.வின்  போராட்டம் அர்த்தமற்றது: டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா பேட்டி
Published on

கோவை,

டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, கோவையில் கடந்த 2 நாட்களாக தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அவர், நேற்று கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த தருணத்தில் அனைத்து பெண்களும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் பெண்களை அவமதித்து வருகிறார். திருச்சியில் கூட தி.மு.க.வின் இலவச கூப்பன் விவகாரம் தொடர்பாக ஒரு பெண் உயிரிழந்துள்ளார். அவர்கள் அந்த பெண்ணை அவமதித்து இழிவுபடுத்தி உள்ளனர்.

இந்த அரசாங்கம் ஒரு பாதுகாப்பற்ற அரசாங்கம். இங்கு தொகுதி மறுவரையறைக்கு எதிராக போராட்டம் மேற்கொள்கிறார்கள். தி.மு.க.வின் இந்த போராட்டம் அர்த்தமற்றது. தொகுதி மறுவரையறை, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு ஆகியவை பெண்களுக்கு சாதகமான ஒன்றுதான். தி.மு.க.வினர் பெண்கள் முன்னேற வேண் டாம் என்று நினைக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com