

சென்னை,
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய கம்ப்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், இந்திய கம்ப்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
”கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்த முறை அதனைவிட அதிக தொகுதிகளை கேட்டோம். ஆனால் அதிக கட்சிகள் சேர்ந்திருப்பதால், ஒரு தொகுதியை குறைத்துக்கொள்ளுங்கள் என சொன்னார்கள்
அதேநேரம், கூடுதல் தொகுதி வேண்டும் என மீண்டும் கேட்டுள்ளோம். எங்கள் கூட்டணியில் உரையாடல் செய்வதற்கான ஜனநாயகம் உள்ளது. அந்தவகையில் பேசுவோம். கூடுதல் தொகுதிகள் கேட்போம்.
பாஜகவை வீழ்த்துவதுதான் எங்களது முதல் குறிக்கோள். தமிழகத்தில் பாஜகவை வீழ்த்தி, இந்தியாவிற்கே திசை காட்ட வேண்டும். பாஜக, ஆட்சி, அதிகாரத்தில் இருக்கக்கூடாது என்பதுதான் எங்களது கொள்கை முடிவு. எனவே, இந்த கொள்கை முடிவில் உறுதியாக நின்று, திமுக கூட்டணியில் அங்கம் வகித்து பாஜக கூட்டணியை வீழ்த்துவோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.