கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.9 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி

பழங்கூர்-மொகலார் இடையே உள்ள கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.9 கோடியில் மேம்பாலம் கட்டும் பணியை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.9 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி
Published on

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள பழங்கூர்-மொகலார் கிராமங்களுக்கிடையே உள்ள கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.9 கோடியில் மேம்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை கெடிலம் ஆற்றில் நடைபெற்றது. இதற்கு திருக்கோவிலூர் ஒன்றியக்குழு தலைவர் அஞ்சலாட்சிஅரசகுமார் தலைமை தாங்கினார். உளுந்தூர்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் ராஜவேல், திருக்கோவிலூர் ஒன்றியக்குழு துணை தலைவர் தனம்சக்திவேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் உதயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜி.அரியூர் எம்.ஆர். என்கிற எம்.ராஜேந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய துணை செயலாளர் மேமாலூர் தணிகாசலம், நிர்வாகிகள் முருகன், காமராஜ், சுப்பிரமணி, கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com